×

மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

 

தேனி, பிப். 13: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து 183 மனுக்கள் பெறப்பட்டன. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டிஆர்ஓ ஜெயபாரதி, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் அபிதாஹனீப் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, புதிய வீட்டுமனைபட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட 183 கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர். இம்மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் விசாணை நடத்தி உரிய தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரத்து 910 மதிப்பிலானஒரு செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண்டிபட்டியை சேர்ந்த பாண்டித்துரை மற்றும் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த் முருகன் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு முதல்அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். இக்கூட்டத்தில், சமூகபாதுகாப்புத் திட்ட தனித்துறை ஆட்சியர் முரளி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Theni ,People's Grievance Meeting ,Theni District Collector ,Theni District Collector's Office ,Dinakaran ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு